எல்ஐசி வழங்கும் சூப்பரான பாலிசி…. 10 மடங்கு லாபம் கிடைக்கும் பாதுகாப்பான திட்டம்…. இதோ முழு விவரம்….!!!!

எல் ஐ சி நிறுவனம் தன் வர்ஷா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டு அம்சங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரிமியம் மட்டும் செலுத்தினால் போதும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் உயிரோடு இருந்தால் மெச்சூரிட்டி தேதியில் மொத்த தொகையும் உத்திரவாதமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகைகள் உள்ளன. பத்து லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் செலுத்தினால் அதனுடன் 1.25 மடங்கு பிரீமியம் தொகையும் கூடுதல் போனசும் வழங்கப்படும்.

அவ்வகையில் குடும்பத்திற்கு 12.5 லட்சம் ரூபாய் மற்றும் போனஸ் கிடைக்கும். இரண்டாவது வகையில் பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு 10 மடங்கு பிரிமியம் கிடைக்கும். அதாவது பத்து லட்சத்திற்கு பிரீமியம் எடுத்தால் ஒரு கோடி ரூபாயும் கூடவே போனஸ் தொகையும் கிடைக்கும். இதில் குறைந்தபட்ச 3 வயது முதல் அதிகபட்சம் 60 வயது உள்ளவர்கள் இணையலாம். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கு எல் ஐ சி யை அணுகலாம்.

Leave a Reply