எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்விட் பதிவு… உ.பி போலீசாரின் பதில் ட்வீட்… என்ன தெரியுமா…? நெட்டிசன்கள் வரவேற்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்வீட் பதிவு ஒன்றை உத்திரப்பிரதேச போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில்  எலான்மஸ்க் தன்னுடைய ட்வீட்டில் “சற்று பொறுங்கள். நான் ட்விட்டர் பதிவு போட்டால் அது பணிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை டேக் செய்து உ.பி போலீசார் அதற்கு பதில் அளிக்கும் விதமாக “சற்று பொறுங்கள். உ.பி போலீசார் ஒரு ட்விட்டர் பதிவு வழியே உங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தால் அது பனிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?” என பதிவிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களாகவே “ஆமாம் அது பணியாக எடுத்துக் கொள்ளப்படும்” என பதிவிட்டு இருக்கின்றனர். இந்த பதிவுக்கு பல பேரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒருவர் “உ.பி போலீசார் எப்போதும் மெச்சதக்க விதமாகவும், ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துபவர்களாகவும் செயல்படுகின்றார்” என கூறியுள்ளார்.

“உங்களுடைய பிரச்சினை என்னவென்று நீங்கள் பதிவிட்டால் அது ஸ்பேஸ்எக்ஸ்  ராக்கெட் வேகத்தில் தீர்த்து வைக்கப்படும்” என அவர் கூறியுள்ளார். ட்விட்டரை உத்திர பிரதேச போலீசார் ஒரு சேவையாக நிறுவி இருப்பதாக ஒருவரும் மற்ற 2 பேர் சிறப்புடன் செய்கின்றீர்கள். “நீங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்கின்றீர்கள் என்பது ஒரு விஷயம் அல்ல”. ஆனால் அன்றைய நாளின் முடிவில் ஒரு தீர்வும் தீர்மானமும் தேவை என மற்றொருவர் கூறியுள்ளார்.