எரிவாயு பற்றாக்குறை…. பிரபல நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் பல நாடுகளின் பொருளாதார தடைகளை ரஷ்யா சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ரஷ்யாவும் பதிலடியாக கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ரஷ்யா ஜெர்மனிக்கான எரிவாயு வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நெட்வொர்க் கழகத்தின் தலைவர் கிளாஸ் முல்லர் கூறியதாவது, “வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் உரிமையாளர்கள் எரிவாயு பாய்லர்கள் போன்றவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ளவும், அவை அதிக அளவில் திறம்பட செயலாற்றும் வகையில் சரி செய்து கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். இங்கு முறையான பராமரிப்பு, 10% முதல் 15% வரையிலான எரிவாயு நுகர்வை குறைக்கும். இங்கே குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னான 12 வாரங்களை குடியிருப்புவாசிகளும் மற்றும் வீட்டு உரிமையாளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களது வீட்டு அறையின் வெப்பநிலையை வழக்கம்போல் வைத்திருக்க வேண்டும். சில அறைகள் சற்று குளிராக வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் சுலோவேக்கியா போன்ற நாடுகளுக்கான எரிவாயு வினியோகத்தினை ரஷ்யா குறைத்து கொண்டுள்ள சூழலில், ஜெர்மனி நாட்டு மக்களிடம் அந்நாட்டு அரசு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு, பால்டிக் கடலின் அடியிலிருந்து செல்ல கூடிய குழாய் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என ரஷ்ய அரசின் கேஜ்பிராம் என்ற ஆற்றல் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் எரிவாயு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குறைவான எரிவாயுவே அனுப்பப்படுகிறது. இதனை சரி செய்வதற்கான உபகரணங்கள் கனடாவிலிருந்து வரவேண்டியுள்ளது. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பினால், மேற்கத்திய நாடுகள் விதித்த தடையால் அவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த விளக்கத்தினை புறந்தள்ளியுள்ள ஜெர்மனி நாட்டு தலைவர்கள் அரசியல் ரீதியிலான முடிவு என இதனை சாடியுள்ளனர். ரஷ்யாவிடமிருந்து நீண்ட காலத்திற்கு எரிவாயு குறைவாக அனுப்பப்பட்டால், நாங்கள் சேமிப்பு பற்றி தீவிரமுடன் பேச வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த குளிர்காலத்தில், ஜெர்மனிக்கு எரிவாயு வினியோகம் இல்லை என்றால் அந்த காட்சியை காண முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால், சில நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணியாற்ற அனுமதிக்கவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *