எரிக்கப்பட்ட நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்பு…. பின்னணி என்ன….? வெளியான திடுக்கிடும் தகவல்….!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திப் வஜே, இவருடைய மனைவி ஸ்வர்ணா வஜே இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி சுவர்ணாவை காணவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஸ்வர்ணா காணாமல்போன அன்றைய தினம் வாதிவர்ஹே பகுதியில் உள்ள ஒரு காரில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

தொடர்ந்து அந்த சடலத்தை மரபணு பரிசோதனை மேற்கொண்டதில் அது சுவர்ணாவின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ சுவர்ணாவை கொலை செய்து அவரது உடலை காரில் வைத்து கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வந்த போலீசார் அவருடைய கணவர் சந்தீப்பை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *