எய்ம்ஸ் செங்கலை கொடுத்து உதயநிதி…. தந்தை ஸ்டாலினிடம் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஸ்ஷாலி 17,062 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உதயநிதி சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திய எய்ட்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை எடுத்து சென்று திமுக தலைவர் ஸ்டாலின் இடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *