நேபாள நாட்டில் டாக்டர். சந்திரா பண்டாரி என்பவர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருடைய இல்லம் புத்தாநகரில் உள்ளது. அவருடைய இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் பண்டாரிக்கு சிறிய அளவிலான தீக்காயமும் அவருடைய தாயாருக்கு பலத்த தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் கீர்த்தீபூரில் உள்ள மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது “நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. அதனால் நேபாளத்திற்கு வெளியே தீக்காயத்திற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வேறொரு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளனர்.