மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செந்தில்குமார்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ நாளன்று செந்தில்குமார் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதோடு அவர் தன் மனைவியை தவறாக பேசியதுடன் கோவத்தில் அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவி கட்டை மற்றும் கற்களால்  கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையானதால் ஒரு குடும்பமே சீரழிந்து பிள்ளைகளின் வாழ்கை கேள்விக்குறியானது.