எப்புட்றா…! 1 லட்சம் ரூபாய் போனை எடுக்க…. 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியதால்…. கம்பி எண்ணும் அதிகாரி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கேர்கட்டா என்ற டேம் உள்ளது. இந்த அணையில் 13 அடி ஆழ தண்ணீரானது அங்கு சுற்றியுள்ள 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இந்த கோடை வெயில் இருந்து தப்பிக்க இங்கு வந்து தான் நீர் அருந்தும். இந்நிலையில் உணவுத்துறை அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களோடு அங்கு சென்றுள்ளார். அப்போது குளித்துவிட்டு நண்பர்களுடன் அந்த உணவுத்துறை அதிகாரி தன்னுடைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது தவறுதலாக செல்போன் தண்ணீருக்குள் விழுந்துள்ளது.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி இரண்டு மோட்டார்களை பயன்படுத்தி அந்த அணையில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றியுள்ளார். சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிவிட்டு அதாவது 15 அடியில் இருந்த தண்ணீரை மூன்று நாட்களாக வெளியேற்றி ஐந்து அடிக்கு கொண்டு வந்து தன்னுடைய செல்போனை கண்டுபிடித்துள்ளார். மூன்று நாட்களாக செல்போன் நீரில் கிடந்ததால் வேலை செய்யவில்லை. இந்த நிலையில் தண்ணீரை வெளியேற்றிய விஷயம் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததால் அங்கு வந்த அவர்கள் ராஜேஷ் விஸ்வாவை கடுமையாக சாடினர். மேலும் அதிகாரிகள் உதவியோடு தான் இதை செய்தேன் என்று அவர் கூறியதையடுது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

Leave a Reply