பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ  என்ற நபர் தன்னுடைய ஆறு மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் மொத்தம் ஒன்பது முறை திருமணம் செய்து நான்கு பேர் விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து ஆறு பெண்களோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் .

பிரேசில் நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய ஆறு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.