சிங்கப்பூரில் ஷிர்லி லிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய 18 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு சிறுவயதில் திருமணம் செய்து கொண்ட தன்னுடைய மகனை தண்டிப்பதற்கு பதிலாக அவருக்கு குடும்பத்தை எப்படி பொறுப்புடன் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய 17 வயதில் ஷிர்லி லிங் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் அடுத்ததாக 3 மறுமணம் செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் அவருடைய முதல் மகனுக்குத்தான் 17 வயதில் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் இதன் மூலம் அவர் 34 வயதில் பாட்டி ஆகி உள்ளார். இதை அவர் மகிழ்ச்சியாக வெளிப்படுத்திய போதிலும் பலவித விமர்சித்து வருகிறார்கள்.