சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து உலக சாதனை படைத்த வினோத் கம்பளி, தற்போது அவருடைய சூழ்நிலை ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது.
மும்பையில் பிறந்து வளர்ந்த வினோத் காம்ப்ளியின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் ஆளுமை அனைவரையும் வியக்கவைக்கும். அவருக்கு வயது 17, மற்றும் சச்சின் டெண்டுல்கர் 16, இருக்கும் பொது பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 664 ரன் பார்ட்னர்ஷிப் வைத்த உலக சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
ரஞ்சி டிராபியில் அவர் விளையாடிய முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அவரது முதல் 7 டெஸ்டில் 2 இரட்டை சதங்கள் மற்றும் 2 ஒற்றை சதங்களை குவித்தார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது பூட் ஒர்க் திகைப்பூட்டும் வகையில் சிறப்பாக இருக்கும் – அவர் ஒருமுறை ஷேன் வார்னை வீசிய ஒரே ஓவரில் 22 ரன்களுக்கு அடித்து நொறுக்கினார்.இது போன்ற பல சாதனைகளை புரிந்துள்ளார்.
1995 இல் தனது கடைசி டெஸ்டில் விளையாடினார் மேலும் அக்டோபர் 2000 க்குப் பிறகு அவர் இந்திய ODI அணியில் தேர்வு செய்யப்படவில்லை மற்றும் 2009 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011ல் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவ்வாறு சிறப்பான திறமைகள் கொண்ட முன்னாள் வீரரின் தற்போதய நிலை ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ, 52 வயதான அவரின் உடல்நிலை குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நடக்க முடியாமல் தடுமாறும் கம்பளியை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் தனது அற்புதமான ஆட்டத்தால் ரசிகர்களை மயக்கிய இடதுகை வீரர், தற்போது ரசிகர்களின் கண்ணீரை வரவழக்க வைக்கிறார்.
கம்பளியின் உடல்நிலை பிரச்சனை புதியதல்ல. அவர் ஏற்கனவே இதய பிரச்சனை மற்றும் மனச்சோர்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் பலமுறை நிகழ்ந்துள்ளன. 2010 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனைகளுக்குப் பிறகு அவரது நிலைமை சீரடைந்தது போல் தோன்றினாலும், தற்போதைய வீடியோ அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதைக் காட்டுகிறது.
View this post on Instagram
“>