கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலகி கிராமத்தில் நிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பாக்யா என்ற மனைவியும் தனு (5), ரக்ஷிதா ‌(3), ஹசன், உசேன் என்கிற 13 மாத இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாக்யா கோபத்தில் தன் 4 குழந்தைகளையும் கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவரை உயிருடன் மீட்டு விட்டனர். பின்னர் இது தொடர்பாக பாக்யா மற்றும் அவருடைய கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முதலில் பாக்யா தன் கணவன் தான் குழந்தைகளை கொன்றதாக கூறினார். ஆனால் கணவன் தன் மனைவிதான் குழந்தைகளை கொன்றதாக கூறினார். இறுதியில் பாக்யா தான் குழந்தைகளை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் பாக்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.