என் Wife-க்கு கள்ளத்தொடர்பு இருக்கு…. நடிகர் வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துவரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷாராவலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1 மகன் இருக்கிறார். இந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நிஷாவும், கரணும் 6 ஆண்டுகள் காதலித்து கடந்த 2012 ஆம் வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு நிஷா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்தி சின்னத் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் கரண் மெஹ்ரா ஆவார்.
அவர் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இதனிடையில் கரண் தன்னை தாக்கியதுடன், தன் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 கோடி எடுத்துவிட்டதாக நிஷா காவல் நிலையத்திற்கு சென்றார். அதன்பின் 31/05/2021 அன்று கோரேகாவ்ன் போலீஸ் நிலையத்தில் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கரண் தன்னை தாக்கியதாகவும், அவருக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் நிஷாசெய்தியாளர்களிடம் கூறினார். பின் கைதான கரண், ஜாமீனில் வெளியே வந்தார்.
அதாவது நிஷா தொடர்ந்த வழக்கை அடுத்து கரணும் அவரது குடும்பத்தாரும் முன்ஜாமீன் பெற்றார்கள். தற்போது கரண் பேட்டி ஒன்றில் கூறியதாவது, நிஷாவுக்கும், ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதனை அந்நபரே ஒப்புக்கொண்டார். அதன்பின்பும் அந்த நபரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டுமாக வாழ்க்கையை புதிதாக துவங்க நினைத்தேன். அடுத்ததாக மகன் கவிஷ் பிறந்தான். அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்களது வீட்டில் தான் வசித்து வருகிறார். சென்ற 11மாதங்களாக அவர் தங்களது வீட்டில் தங்கியிருக்கிறார் என்று கரண்மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *