என் 91- வது வயதில்…. “இந்த விருது கிடைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சி”….  சவுகார் ஜானகி பெருமிதம்….!!!

 பலம்பெறும் நடிகை சவுகார் ஜானகி தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் 80ஸ் நடிகையாக வலம் வந்தவர் சவுகார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.கடந்த 1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது 19 வயதில் கதாநாயகியாக என்.டி.ராமராவ் நடித்த சவுக்கார் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்ததோடு 1950 ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை சினிமாவில் பிரபலமான நடிகையாக விளங்கியுள்ளார். பாலச்சந்தர் இயக்கத்தில் இரு கோடுகள், எதிர்நீச்சல், பாமா விஜயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எதிர்நீச்சல் திரைப்படத்தில் பட்டு மாமி எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது தேசிய அளவில் புகழ்பெற்றது. நடிகர் சிவாஜி கணேசனுடன் தில்லுமுல்லு மற்றும் புதிய பறவை படத்தில்” பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற பாடலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.

சவுகார் ஜானகியின் திறமைகளை ஜெமினி கனேசன் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.என் 91 ராவது பிறந்தநாளுக்கு பிறகு இந்த விருது கிடைத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சி நான்பெற்ற விருதுகளில் இந்த விருத்தைதான் நான் மிக கவுரவமாக கருதுகிறான் விருது வழங்கிய மத்திய அரசுக்கும் எனது ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *