டி20 கிரிக்கெட்டில் புது வரலாற்றை தனதாக்கியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. நேற்றைய ஹைதராபாத் உடனான போட்டியில் விளையாடி விக்கெட் எடுத்ததன் மூலம், ஒரு விக்கெட் கீப்பராக டி20ல் அதிக விக்கெட் எடுத்த வீரராக தோனி மாறியுள்ளார். 208 விக்கெட்டுகளுடன் இவர் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக 207 உடன் குவிண்டன் அ டி காக், 205 உடன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இது தோனியின் கடைசி ஐபிஎல் ஆக நடப்பு சீசன் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத் உடனான போட்டியின் வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி, உருக்கமாக பேசினார். எனது கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். இப்போது ரசித்து விளையாடுவது முக்கியமானது. இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்மீது அளவற்ற அன்பையும் காதலையும் ரசிகர்கள் வைத்துள்ளனர் என ஓய்வு குறித்து சூசகம் தெரிவித்துள்ளார்