அண்ணா நகர் பகுதியில் த்ரிஷா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருக்கும் கவரிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்ததும் திரிஷா தனது நண்பரான கோகுல் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோகுல் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
அது குறுகலான சாலை என்பதால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கோகுலம் த்ரிஷாவும் கீழே விழுந்தனர். அப்போது பேருந்து சக்கரத்தில் சிக்கி திரிஷா படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திரிஷா பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக லேசான காலத்துடன் கோகுல் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.