என் மகனை போல யாரும் இருக்காதீங்க…! ஹெல்மெட் வழங்கிய தந்தை…. விழிப்புணர்வு கொடுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது.

அந்தவகையில், மத்தியப்பிரதேச மாநிலம்  நர்மதாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபுதயாள் மகன் சந்திரசேகர் (21) கடந்த 8ஆம் தேதி பைக் விபத்தில் உயிரிழந்தார். எனவே சாலை விபத்தில் இறந்த தனது 21 வயது மகனின் நினைவாக, அவருடைய தந்தை பொதுமக்களுக்கு ஹெல்மெட் விநியோகம் செய்தார். 21 வயதில் ஆசை மகன் இறந்துவிட்டதால், தன் மகனைப் போல் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக 21 பேருக்கு ஹெல்மெட் வழங்கினேன் என்றார்.

Leave a Reply