என் போனை தருவியா மாட்டியா?… . வாலிபர் அளித்த புகார்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் காந்தி என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு 8 ஆயிரம்  ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் சுப்பிரமணி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது உறவினரான விக்னேஷ் என்பவரிடம் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து  விக்னேஷ் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும்  விக்னேஷ் சுப்பிரமணியனின் செல்போனை  பறித்து  கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து  சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *