அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று விவசாய சங்கங்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. அதாவது அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 85 சதவீதம் நிறைவடைந்து விட்ட நிலையில் சமீபத்தில் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் எனவும் அந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவருக்கு பாராட்டு விழாநடக்கும் நிலையில் இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி மாட்டு வண்டியில் வந்து கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நான் யாருக்கும் அடிமை கிடையாது என்றும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்றும் கூறினார்.

மேலும் முன்னதாக பாஜகவின் ஆஸ்தான அடிமை எடப்பாடி பழனிச்சாமியார் கூட பொறுக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி நான் யாருக்கும் அடிமை கிடையாது என்று கூறியுள்ளார். அதோடு 60 ஆண்டுகால விவசாயிகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக என்றும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் என்னுடைய பிறவி பயனை அடைந்தேன் என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் கூறினார்.