உலகின் மூலை முடுக்கலாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் காட்டெருமை ஒன்றை வேட்டையாட நினைத்த சிங்கத்தை சக எருமை ஒன்று பந்தாடிய காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விலங்குகளுடைய வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைப்பதாகவே இருக்கும்.

பசிக்காக வேட்டையாடும் விலங்குகளின் வேகமும் பயங்கரமானதாகவே இருக்கும். அந்த வகையில் இந்த வீடியோவில் காட்டெருமை ஒன்று சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு திணறியது. இதை பார்த்த மற்றொரு எருமை ஒன்று அந்த சிங்கத்தினை பயங்கரமாக வேட்டையாடியுள்ள பகீர் காட்சி வைரலாகி வருகிறது. இந்த காட்சியைப் பார்த்த பலரும் தன்னுடைய இனத்திற்கு ஒரு ஆபத்து என்றால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள் கூட எவ்வளவு பாசமாக இருக்கின்றன என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.