மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உட்பட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் -2 வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. நேற்று பெங்களூரில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா போன்றோர் பங்கேற்றனர்.

இதில் ஜெயம்ரவி பேசியிருப்பதாவது “நான் திரைப்படங்களில் நல்லவனாக நடிக்க விருப்பமில்லை. இருப்பினும் கெட்டவனாக நடித்தால் தன் நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம். பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இருந்தாலும் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஒருவேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் தனக்குள் வந்திருக்கும். என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10% கூட ஈடாகாது. தன்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படியே நடித்தேன். என் வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்து இருக்கிறேன்” என அவர் கூறினார்.