தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சோகேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுடைய திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நடிகை ஹன்சிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ள நிலையில் தோழியின் கணவரை அபகரித்ததாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்த எதிர்ப்புகள் குறித்தும் பேசியுள்ளார்.

என் நெருங்கிய தோழியை விவாகரத்து செய்வதற்கு நான்தான் காரணம் என்றும், என் தோழியின் கணவரை அபகரித்து விட்டேன் என்றும் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் என்னை மிகவும் காயப்படுத்தியது. இந்த தகவல்களால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான போது சோஹேல் தான் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தார் என்று கண்ணீர் மல்க ஹன்சிகா கூறியுள்ளார். மேலும் அவரின் கடந்த காலத்தை பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் நாங்கள் இருவரும் எங்களை ஒருவருக்கொருவர் மனதார ஏற்றுக் கொண்டோம் என்றும் கூறியுள்ளார்.