தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்தப் படத்திற்குப் பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விமர்சனங்களும் எழுந்தது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் நட்டி நட்ராஜ் மற்றும் ராதா ரவி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.
இந்த படம் சமூக அக்கறை கொண்ட படமாக இருப்பதால் பெண்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜியின் மனைவி தன்னுடைய மகளுடன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தன்னுடைய கணவர் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் மையப்படுத்தி படம் எடுக்கவில்லை எனவும் அவர் உள்ளதை உள்ளபடி தான் படமாக எடுக்கிறார் எனவும் கூறியுள்ளார். ஒருவேளை என்னுடைய கணவர் இது போன்ற காரணங்களுக்காக சிறைக்கு சென்றாலும் நான் அவரை பெயிலில் எடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் மோகன் ஜியின் மனைவியின் பேட்டி தற்போது இரு வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.