மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கொடி, சைரன், தள்ளி போகாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனிடம் காதல் பற்றி ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் எப்போதும் உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறுவது தான் மிகப்பெரிய பொய் என்று கூறினார். அதோடு என் உயிரே நீதான். நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்ல கூடிய நச்சு காதலில் இருந்து இப்போதே தப்பித்து வெளியே ஓடிவிடுங்கள் என்று நான் சொல்வதுதான் ஒரே ஒரு அறிவுரை என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் காதல் பற்றி இப்படி கூறியதால் அவருக்கு என்ன ஆனது என்று பலரும் கேட்டு வருகிறார்கள்..