என் ஆசான் கருணாநிதி… நடிகை குஷ்பு தடாலடி…!!!

திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்னுடைய அரசியல் ஆசான் என்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்னுடைய அரசியல் ஆசான் என்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் தமிழக பாஜகவினர் மோடி மற்றும் அமித்ஷாவை முன்னிலைப் படுத்திப் பேசி வரும் நிலையில், குஷ்பு கருணாநிதி தான் என்னுடைய ஆசான் என கூறியது விவாதப் பொருளாக மாறியுள்ளது.