‘என் அன்பான அம்மா’… தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு போட்ட காஜல்…!!!

நடிகை காஜல் அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் ‘என் அன்பான அம்மா மற்றவரின் மகிழ்ச்சிக்காக உங்கள் அன்பு ,அழகு, ஞானம், தயவு ஆகியவற்றை தியாகம் செய்வதால் நீங்கள் போற்றப்படுகிறார்கள். உங்களைச் சுற்றி உள்ள அனைவரிடமும் அன்பையும், மகிழ்ச்சியையும் நிரப்பி வருகிறீர்கள் .

This photo of Kajal Aggarwal with her mother is awesome - Pinkvilla - Photos

அனைவரையும் அன்பாக ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் சக்தியையும் பொறுமையுடன் செலவு செய்கிறீர்கள் . உங்கள் சாதனைகளை நெருங்குவது கடினம் தான். ஆனால் நான் அதிர்ஷ்டவசமாக உங்கள் சாதனைகளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை பெற்றேன் . நீங்கள் செய்ததை போல என்னாலும் ஒரு நாள் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் . உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் . உங்களைப் பற்றி முழுமையாக சொல்வதற்கு இந்த ஒரு பதிவு போதாது . உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா . கடவுள் எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்’ என பதிவிட்டுள்ளார் .