‘என் அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி இதுதான்’… நடிகர் கார்த்தியின் பதிவு… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நெப்போலியன், யோகிபாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் சுல்தான் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் கார்த்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு பல நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘சிறுவயதில் என் அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி அவர் அணிந்திருக்கும் சட்டையை போலவே நானும் அணிந்து கொள்வேன் . இப்போது மீண்டும் அப்படி முயற்சி செய்ய எனக்கு ஆசையாக இருக்கிறது . உங்கள் சகோதரர்களுடன் நீங்களும் இப்படி உடை அணிந்தது உண்டா?’ என பதிவிட்டுள்ளார். தற்போது கார்த்தி வெளியிட்டுள்ள இந்த கியூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.