தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா (87) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக கடந்த 18-ஆம் தேதி காலமானார். இவருக்கு நடிகர் வடிவேலு உட்பட 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு விரகனூரில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்கில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.‌ இந்நிலையில் நடிகர் வடிவேலு தன்னுடைய தாயார் குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை வடிவேலு ட்விட்டரில் பகிர்ந்து என்றும் என் நினைவில் அம்மா என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Vadiveluhere/status/1616365858447564800?t=Gihy_h-V5IDfzVL7zUwmow&s=19