ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். மகேந்திரனின் மூன்று பிள்ளைகளும் ஸ்ரீபெரும்புதூர் நேதாஜி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மூத்த மகள் பவித்ரா மகன் தனுஷ் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்று விட்டு இரவு சுமார் 1:30 மணிக்கு தனுஷ் வீட்டிற்கு வந்துள்ளார். காலை தூங்கி எழுந்து மதியம் 12 மணி அளவில் உணவு சாப்பிட்டுள்ளார்.

அடுத்த அரை மணி நேரத்தில் தனுசுக்கு கை கால் வலிப்பு போல வந்து பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனுஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனுஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பவித்ரா மருத்துவமனையில் கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.