திருமணமாகி 20 நாள்தான் ஆகுது… வெளியே சென்ற புதுப்பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாகொந்தை கிராமத்தில் உதயகுமார் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் பெரிய நகரில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களுக்கும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் கிருஷ்ணவேணியை எங்கு தேடியும் காணவில்லை. இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.