சமூகஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் ஒரு சிலவற்றை நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதே நேரம் சில சமயம் பல திடுக்கிடும் வீடியோக்களும் வெளியாகும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ தான் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்துள்ளார்.
வீடியோவொல், ஒரு நபர் குளியல் அறையில் நிற்கிறார். அப்போது குளியலறையில் கீழே நாகப்பாம்பு படமெடுத்தபடி காணப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து, பாம்பு தலை மேல் அந்நபர் ஊற்றுகிறார். ஒருக் கட்டத்தில் கோபமடைந்த பாம்பு தண்ணீர் ஊற்றுவதற்காக தன்னை நோக்கி வரக்கூடிய பிளாஸ்டிக் கோப்பையை கவ்விக்கொள்கிறது.
इतने ठंड में बेचारे सांप को पानी से नहला रहा है 🥲🐍🙏 pic.twitter.com/DtkrL4xiW3
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) December 2, 2022
சற்று விலகினாலும் அந்நபரின் கையை பாம்பு பதம்பார்த்திருக்கும். அந்த பாம்புக்கு விஷம் எடுக்கப்பட்டு இருப்பது குறித்த விபரம் தெரியவரவில்லை. எனினும் அந்நபர் எது பற்றியும் கவலைக்கொள்ளாமல் தொடர்ந்து அதை தொட்டு குளிப்பாட்டி விடுகிறார். தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.