என்ன கொடுமைடா சாமி!…. இளைஞரை கடத்தி…. 4 பெண்கள் செய்த கொடூர செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் ஜலந்தரிலுள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணிபுரியும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அக்காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்து உள்ளனர். இதையடுத்து காரிலிருந்த இளம் பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டு உள்ளனர். இதை உண்மை என நம்பிய அந்நபர் சீட்டை வாங்கி படித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் அந்நபர் மீது ஸ்பீரே அடித்துள்ளனர். அதன்பின் அந்த நபர் மயங்கி விழுந்துள்ளார்.

பின் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து பெண்கள் ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தி அந்நபரின் கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். மேலும் அந்த பெண்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறினார். அதன்பிறகு 4 பெண்களும் மாறிமாறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்நபர் கண்ணீர் மல்க கூறினார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் அந்நபரின் கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பேட்டி அளித்தபோது, அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தார்கள். மேலும் அவர்கள் நன்கு ஆங்கிலம் பேசினர் என்று கூறினார். இது தொடர்பாக புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு வேளையில் இது போன்று ஒரு ஆணை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply