என்ன காரணமா இருக்கும்…? புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை…!!

திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலம்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெருந்துறை சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த மாதம் புதுநிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்னவென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *