என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென உயிரிழந்த பச்சிளம் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பிறந்து 20 நாட்கள்  ஆன குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமல்வாடி பகுதியில் தொழிலாளியான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை  பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *