என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென விஷம் குடித்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடக்கொல்லை மேடு கிராமத்தில் பழணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *