என்ன எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிய வால் நட்சத்திரமா….? பூமியில் நடக்க உள்ள ஆச்சரிய நிகழ்வு…. அறிவிப்பு வெளியிட்ட நாசா….!!

எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரமானது   வரும் ஜூலை 14ஆம் தேதி பூமியை கடக்கும் என நாசா அறிவித்துள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரமானது வரும் ஜூலை 14 ஆம் தேதி சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து பூமியை கடக்க உதவுவதாக நாசா அறிவித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் Comet K2 என அழைக்கப்படும்.

இந்த வால் நட்சத்திரமானது பூமியில் இருந்து 270 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் தொலைநோக்கி இல்லாதவர்கள், மெய் நிகர் (virtual) தொலைநோக்கியின் மூலமாக இந்த வால் நட்சத்திரத்தின் பாதையை ஆன்லைனில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *