நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை உறுதிசெய்திருக்கிறார். இந்த நிலையில் தன் திருமணம் குறித்து தமன்னா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது, தமன்னா சினிமாவிற்கு வந்த நேரத்தில் 10 வருடம் இத்துறையில் இருப்பதே கஷ்டம் என நினைத்தாராம்.

இதன் காரணமாக 30 வயதில் தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் என திட்டம் போட்டு வைத்திருந்தாராம். எனினும் தற்போது 30 வயதில் மீண்டும் பிறந்ததாக உணர்கிறார். திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். அந்த பொறுப்புகளை எப்போது ஏற்றுக்கொள்ள இயலும் என தோன்றுகிறதோ அப்போதுதான் திருமணம் செய்வேன் என தமன்னா கூறியிருக்கிறார்.