மண்டேலா திரைப்படத்தின் டைரக்டர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படக்குழு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. வண்ணாரப்பேட்டையில் எனத்தொடங்கும் இப்பாடலை சிவா மற்றும் அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து பாடுகின்றனர். இப்பாடல் தொடர்பாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் உடன் பாடுவது ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் எனக்கூறி சிவா மற்றும் அதிதியை Fun செய்துள்ளனர்.