ஜெயம்ரவி நடித்து கடந்த 2019ல் வெளியாகிய கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் “லவ் டுடே” படம் வாயிலாக கதாநாயகன் ஆகியுள்ளார். இப்படம் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்துள்ளது. இதன் காரணமாக படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் நடைபெற்ற லவ் டுடே படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் கலந்துகொண்டார்.

அப்போது அவர்  பேசியதாவது “லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நான் விரும்பியதும் பலர் தயங்கினர். மேலும் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம் என்று கூறினர். உலகம் முழுவதும் இதுவரையிலும் ரூ.100 கோடிக்கு மேல் லவ் டுடே வசூல் ஈட்டியுள்ளது. அறிமுக நாயகனாக நான் இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்து லவ் டுடே படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி” என்று பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.