மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேல மாசி வீதி பகுதியில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு தலைப்பாகை மற்றும் பாசிமணி மாலையை அணிவித்து வரவேற்றனர்.

இதனை ஏற்றுக் கொண்ட அவர் பாசிமணி மாலையை கழற்ற முயன்றார். அருகில் இருந்தால் நிர்வாகிகள், அண்ணே பாசமாக வட மாநிலத்தவர்கள் அறிவித்த பாசிமணி மாலையை கழற்ற வேண்டாம் என்று கூறினர். அதற்கு, ‘ஏம்பா, என்னை இந்த படத்தோடு மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களேப்பா என்று செல்லூர் ராஜு கூறியதால் கூட்டம் கலகலப்பானது