மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. இவர் நடிகர் அஜித்துக்கு தம்பியாக வீரம் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் பாலா கொச்சி காவல் நிலையத்தில் தற்போது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோட்டயம் சென்றிருந்தபோது என்னுடைய மனைவி எலிசபெத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கஞ்சா போதையில் வந்த 3 பேர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இவர்கள் பக்கத்து வீட்டிலும் தகராறு செய்துள்ளனர்.
இவர்களுடைய முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்று புகாரில் தெரிவித்துள்ளார். அதோடு மர்ம நபர்களின் கார் நம்பரையும் பாலா போலீசாரிடம் கொடுத்துள்ளாராம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நடிகர் பாலா அவருடைய மனைவியுடன் நடைப்பயணம் சென்றிருந்தபோது 2 பேர் அவருடைய காலில் விழுந்துள்ளனர். அவர்கள்தான் பாலாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்ததோடு அவரைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் புகாரில் பாலா தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணிடம் வந்து வீரத்தை காட்டுவது தான் ஆண்மையா என்றும் பாலா விமர்சித்துள்ளார். மேலும் நடிகர் பாலா தன்னை கொல்ல முயற்சி போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.