என்னை எப்படி கூப்பிட்டாங்க தெரியுமா ? நெகிழ்ந்து போன பிரபல நடிகை …!!

தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமாகி உள்ள நடிகையை கன்னட ரசிகர்கள் நெகிழ வைத்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது. 

நடிகை பிரியா ஆனந்த் வாமனன் என்னும் தமிழ்  படத்தில் அறிமுகமானார். பிறகு சில படங்களில் நடித்தார். மேலும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரா படம் மூலமாக கன்னட திரை உலகில் அறிமுகம் ஆனார். மீண்டும்   புனித் ராஜ்குமார் உடன் சேத்தன் குமார் இயக்கும்  ஜேம்ஸ் படதில் நடித்து வருகிறார்.

ஜேம்ஸ் படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறியுள்ளதாவது;   ராஜகுமாரா படம் போன்றே இதிலும் கமர்சியல் ஃபேமிலி என்டர்டேய் மெண்ட் இருக்கும் .இதில் எனது கதாபாத்திரம் சுவாரசியம் மிக்கது. மீண்டும் புனித் ராஜ்குமார் உடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.  ராஜகுமாரா வில் எங்களது ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜேம்ஸ் பட செட்டில் மக்கள் எங்களை ராஜகுமாரா ராஜகுமாரி என்று தான் அழைப்பார்கள். இது முதல்முறை அல்ல. நான் கோவாவிற்க்கு சென்றபோது என்னை புனித் ராஜ்குமார் பட ராஜகுமாரி என்று மக்கள் அழைத்தார்கள். இதிலிருந்து கன்னட ரசிகர்கள் என்மீது மிகுந்த அளவுகடந்த அன்பு வைத்துள்ளார்கள்.  ஊரடங்கு க் கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன் இதனால் ஜேம்ஸ் படப்பிடிப்பில்  நம்பிக்கையுடன்  கலந்து  கொள்வேன்  என   கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *