என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், உங்களால் சமாளிக்க முடியாது’.. முதமைச்சருக்கு டுவிட் செய்த பிக்பாஸ்..!!!!

தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் இரண்டாவது இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோ-வில் டைட்டிலையும் வென்றவர் பாலாஜி முருகதாஸ். இதைத் தொடர்ந்து இவர் ரவீந்தர் தயாரிப்பில் படம் ஒன்று நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் மது கடைகளை மூட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பாலாஜி முருகதாஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேலும் மதுக்கடைகளால் தன்னை போன்ற ஆதரவற்றவர்கள் உருவாகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது போதாது என தன்னை அரசியலுக்கு இருக்காதீர்கள். உங்களால் சமாளிக்க முடியாது என்றும் பாலாஜி முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் வைரலான நிலையில் பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் பழைய புகைப்படத்தை நெட்டிசன்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.