பிரபல  பாலிவுட் நடிகர் சல்மான் தற்போது பிக்பாஸ் ஓடிடி சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் இதில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னிலியோன்  இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டஇது என் கெரியரில் திருப்பு முனையாக இருக்கும், நிகழ்ச்சியுடன் ஒன்றி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல தயாராகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

நடிகை சன்னிலியோன் தமிழில் வட கறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதேபோல முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.