விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் நடிகர் சதீஷின் நடிப்பு பார்ப்பவர்களை அசர வைத்துள்ளது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை தரம் குறைத்து பேசி தற்போது கோபி தனது மகன்கள் இடம் அடிவாங்க சென்றுள்ளார்.
இப்படி சீரியல் ஒரு பக்கம் சென்றாலும் நடிகர் சதீஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எப்போது மட்டிவாக இருந்து வருகிறார். தினமும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இயேசுவின் சிலையை கட்டிப்பிடித்தவாறு ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் என்னுடைய நெருங்கிய நண்பர் எனவும் சதீஷ் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் கோபியின் அலப்பறைகளுக்கு அளவே இல்லை எனக் கூறி அதனை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க