“என்னுடைய அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” ரஷ்ய அதிபர் புதினின் வாழ்த்து மடல்…!!!!

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பல்வேறு நாட்டினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சுதந்திர தின விழாவுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து உலக அளவில் தொழில் நுட்பம், சமூகம், அறிவியல், பொருளாதாரம் உட்பட அனைத்து விதமான துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சர்வதேச அளவில் நிகழ்ச்சி நிரல்களில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய இரு நாட்டிற்கிடையே இருக்கும் நட்பை உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் கூட்டு முயற்சிகளின் மூலமாக வளர்ச்சி பாதையை நோக்கி செல்வோம் என்று கூறியுள்ளார். மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஆரோக்கியமுடனும், நலமுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்தியதோடு, இந்திய மக்கள் அனைவரும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *