“என்னுடன் வாழ மறுக்கும் கணவர்”… இரண்டாம் திருமணம் செய்ய போகிறார்… போலீசாரிடம் புகார் அளித்த சீரியல் நடிகை..!!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சேர்ந்தவர் சீலா இவரது வயது 32. இவர் டிவி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இடைப்பாடி செல்லான்டிவலையைச் சேர்ந்த சவுந்தரராஜன், இவரது வயது 31. எம்பிஏ படித்து முடித்த இவர் புலியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வேறு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதனால் என்னுடன் வாழ மறுக்கும் என் கணவர் மீதும், அவரது தாய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் இருவரும் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த வீடியோ பதிவுகளை போலீசாரிடம் ஆதாரமாக ஷீலா கொடுத்துள்ளார். அதன்பின் ஷீலா சௌந்தரராஜன் இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் வைத்து  பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *