என்னா அழகு…!! பாவாடை தாவணியில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் பாவாடை தாவணி அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விக்ரம், விஷால் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த, சாணிக் காயிதம் மற்றும் சில தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாவாடை தாவணி அணிந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘குருவாயூர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாகவும் இந்த பாவாடை தாவணியை அணிய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த ஆடையை வடிவமைத்த டிசைனர் பூர்ணிமாவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் . தற்போது கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.