என்னாது.! லியோ படத்தில் ராம்சரண் நடிக்கிறாரா…? இது என்னப்பா புது டுவிஸ்ட்… லிஸ்டிலேயே இல்லையே…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் மற்றும் கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில்  படத்தில் விக்ரம், சூர்யா மற்றும் கமல் ஆகியோரில் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் ராம்சரண் தான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது ராம்சரண் லியோ படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.