தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு துணிவு படத்திலிருந்து காசேதான் கடவுளடா, சில்லா சில்லா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஆகும். இப்படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக பட குழு அறிவித்துள்ள நிலையில், தணிக்கை குழு துணிவு படத்தில் இருந்து 13 ஆபாச வார்த்தைகளை மியூட் செய்துள்ளனர். இதன் காரணமாக துணிவு படம் மங்காத்தா படம் போன்று இருக்கும் என்று ரசிகர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் துணிவு திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.